No posts.
No posts.
" மூடநம்பிக்கை என்ற இருண்ட கதவு மூடினால்தான்,
தன்னம்பிக்கை என்ற ஒலியின் கதவு திறக்கும்!"

விழி! சிந்தி! செயல்படு!


பொன்மொழிகள்:

1.தன்னம்பிக்கை இல்லாத ஒவ்வொரு மனிதனும் தனது உடலில் உயிர் இல்லாத ஒரு பாவமனிதனாக இருப்பான் .

.திவ்யா
புளியாந்தோப்பு,சென்னை 12

2.மூட நம்பிக்கை என்பது மனிதனே உருவாகிக் கொண்ட அறியாமை ஆகும்.அதாவது தன்னம்பிக்கையின் தளர்ச்சியே மூடநம்பிக்கை ஆகும்.
எம்.லட்சுமி
காயித்தே மில்லாத் கல்லூரி,


3.மூட நம்பிக்கைகளை பெரிதும் விரும்புவர்கள் யார் என்று பார்த்தால்,பெரும்பாலும் தன்மீது நம்பிக்கை இல்லாதவர்களாகத்தான் இருப்பார்கள்.

சீ.நரேந்திரன்
புதுக்கல்லூரி

4.உலகில் உயர்ந்த மேதைகள் யாரும் ஜாதகத்தை நம்பி வெற்றி பெறவில்லை.அவ்வாறு எத்தகையொரும் தமது நூலில் குறிப்பிடவில்லை.மனிதனின் விடாமுயற்சி ஒருபோதும் தோற்றுப்போணதில்லை. .

மு
.முகமத் முஸ்மில்
புதுக்கல்லூரி

5.ஓராண்டு நோக்கிருந்தால் பூக்களை வளருங்கள்;பத்தாண்டு நோக்கிருந்தால் மரங்களை வளருங்கள்;முவில்லா நோக்கிருந்தால் தன்னம்பிக்கை வளருங்கள்.

கே
.காவித்
சிக்கரயபுரம்.


6."அறிவு இருந்தால் அனைத்தையும் உருவாக்கலாம்"

எம்.ப்ரவீன் புஷ்பா
நிர்மலா கல்லூரி,கோவை.

7.துணிவில்தான் பிறக்கிறது தன்மானம்

எம்.ஹஜராபி,
நிர்மலா கல்லூரி,கோவை.

8.ஜாதகம் படுத்தும் பாட்டை விட,ஜாதகர்கள் படுத்தும் பாடு மிகவும் பெரியது.

வி.கல்பனா
நிர்மலா கல்லூரி,கோவை.

9.ஆறு அறிவுள்ள மனிதனின் எதிர்கால வாழ்க்கையை எப்படி "5 "அறிவுள்ள கிளி சொல்லும் என்பதை அவர்கள் எண்ணுவதில்லை.

ஆர்.கிறீஸ்பின் ருமீனா ரோஸ்,
நிர்மலா கல்லூரி,கோவை.

10.உலகை வெள்ளத் துடிப்பவ்ர்க்குத் தன்னம்பிக்கையே மூன்றாவது கை.
சு.லட்சுமி
முருகப்பா தொழில்நுட்பக் கல்லூரி,
சென்னை - 52.

11.தன்னம்பிக்கை இல்லாதவர்களே தற்கொலை செய்து கொள்கின்றனர்.
தன்னம்பிக்கை உள்ளவர்கள் எதிர்த்து போராடுகின்றனர்.
ஆர். மதன்பாபு
முருகப்பா தொழில்நுட்பக் கல்லூரி,
சென்னை - 52.

12.முடியும் என்பதற்கு முன்னுரை எழுது
முடியாது என்பதற்கு முடிவுரை எழுது.
எம். முன்னா
சென்னை பலகலைக் கழகம்,
சென்னை -5.

13.1869க்கு முன்னால் நிலவு என்பதை சிவன் அது சிவனுடைய தலையில் இருக்கிறது கங்கையின் பக்கட்திலே இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு இருந்தார்கள்.1869க்கு பிறகு ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்று வந்த பிறகு நிலவு என்பது பாறைகளும்,மலைகளும் நிறைந்தது என்பது விளங்கிவிட்டது.சிவனும் இல்லை,ஜடா முடியும் இல்லை என்று புரிந்து விட்டது.

ஆர்.சேகர்
திருவள்ளூர் மாவட்டம்


14. மூட நம்பிக்கை என்பவை பழங்கால மக்கள் நமக்கு விட்டுச்சென்ற பயன்படா செல்லாக்காசுகள்.இவை வைத்து நமது முன்னேற்றத்தை அதிகப்படுத்த இயலாது என்றும் இவை முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைகளே தவிர ஏணிகள் அல்ல.


ஈ.சக்திவேல் ,
பி.ஏ.ஆங்கிலம் முதலாமாண்டு ,
பச்சையப்பன் கல்லூரி .



15.நம்மில் பலர் பள்ளி விழும் பலன் பார்க்கிறார்கள்.இதில் "கபாலம் மீது விழுந்தால் அகால
மரணம் ,தொடை மீது விழுந்தால் தனம் பெருகும் "என்று கூறுகிறார்கள்.எனவே அனைவரும் தலைமேல் விழாமல் இருக்க குடையை பிடித்துக் கொண்டே இருக்க முடியுமா.?அல்லது பள்ளி இருக்கும் இடத்தில் அது விழுமா .?என்று தொடையைக் காட்டிக் கொண்டுதான் இருக்க முடியுமா?




ச.பாலு,
இரண்டாம் ஆண்டு,பி.எஸ்.சி.இயற்பியல்,
அரசினர் கலைக் கல்லூரி,நந்தனம்.




16.கடவுளின் மீதும் மந்திரவாதிகளின் மீது வைக்கும் நம்பிக்கையயை
உங்கள் மீது வைத்துப்பாருங்கள்.மூடநம்பிக்கை என்ற மலையை
தன்னம்பிக்கை என்ற உளி தகர்த்து தவிடு பொடியாக்கிவிடும்.


இரா.புவியரசன் ,
பி.சி.ஏ,இரண்டாம் ஆண்டு,
புதுக்கல்லுரி,
சென்னை 14.




17.கும்பகோணத்தில் தீ விபத்தில் இறந்த 96 குழந்தைகள்.அந்த பிஞ்சு மலர்கள் அனைவருக்கும் ஜாதக நம்பிக்கை இருந்திருக்காதா?அவர்களின் பெற்றோருக்கு ஜாதக நம்பிக்கை இருந்திருக்காதா ?பின்,அந்த குழந்தைகளின் ஜாதகத்தை கனித்த ஜாதகர்கள் இதுபோல ஒன்று நடக்கும் என்று ஏன் முன்பே கூறவில்லை? அப்போது ஜாதகங்கள் உண்மை இல்லை அல்லவா?

கு
.தேவிப்ரியா,
இளம் அறிவியல் தாவறவியல் முதலாம் ஆண்டு,
ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி,
சேலம் 16.